நாள்
23
(05.06.2020)
'கரங்களைத் தாங்கும் புத்தகங்கள'
தொல்தமிழர்
வாழ்ந்துவந்த
தூய்மையான வாழ்க்கையினைத்
தெள்ளுதமிழ்ச்
சொற்கொண்டு
தீட்டிட்ட
இலக்கியமும்
வகுத்துரைக்கும்
வாழ்வியலின்
வளமான கூறுகளைத்
தொகுத்துரைக்கும்
தொகைநூலாம்
தொன்மையான சங்கநூலும்
வாழ்க்கையிலே
நெறிதவறி
வழியற்று நிற்போர்க்கு
தோள்கொடுக்கும்
துணையாகத்
தோன்றிட்ட நீதிநூலும்
குடிமக்கள்
வாழ்க்கையினைக்
குற்றமில்லா காப்பியமாய்
எடுத்துரைக்கும்
இனிதான
இளந்தமிழின்
இலக்கியமும்
பகுத்தறிவுக்
கருத்தோடு
பண்பாட்டுக் கருத்தினையும்
வகுத்துரைக்கும்
வளமாக
வாய்த்ததொரு பெட்டகமாய்
ஈரோட்டுப்
பெரியாரின்
இனமான எழுத்துரையும்
ஊரெல்லாம்
பேசிவந்த
உரமான பேச்சுரையும்
காலத்தின்
கோலத்தில்
கனவின்றி வாழ்ந்ததாலே
தாழ்ந்தவரின்
கைகளையும்
தாங்குமிந்தப் புத்தகங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக