நாள்
29
(11.06.2020)
'சுவடுகளற்ற அலைகள்'
கார்மேகம்
கலைந்தோட
காற்றடிக்கும் திசைபார்த்து
நேர்த்தியாகக் கலம்செலுத்தும்
நிகரில்லா மீனவனோ
ஆர்ப்பரிக்கும்
அலைநடுவே
ஆண்டாண்டு காலமாகப்
பார்ப்பவரும்
கேட்பவரும்
பரிவோடு பரிதவிக்க
படபடக்கும்
காற்றோடு
பாய்மரத்தில் சென்றாலும்
திடமான
மனத்தோடே
திரைமீது சென்றாலும்
கடலோடி
மீன்பிடிக்கும்
கட்டுமரக் காரனவன்
விடுகின்ற
மூச்சுக்கும்
விலையின்றிப் போனதுபார்
கறையில்லா
வாழ்வினையே
கடப்பாடாய்க் கொண்டொழுகிக்
கரைமீளும்
மீனவனின்
கைத்தடமும் கால்தடமும்
உறைந்திருக்கும்
சுவடுகளை
ஓயாத அலையொன்று
சுரம்பாடும்
சோதனையில்
சுத்தமாக அழித்ததுபார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக