ஞாயிறு, 21 ஜூன், 2020




நாள் 7 (20.05.2020)

'சாய்ந்திருப்பதெல்லாம் மாயத்தோள்கள்'

பங்கமில்லா மனம்கொண்ட
பாசமுள்ள மனிதரிடம்
சங்கடங்கள் வரும்போது
சாய்ந்திருக்க தோள்வேண்டிச்
செங்காந்தல் நிறமொத்த
சேலிரண்டால் தேடயிலே
அங்கிருக்கும் தோள்களெல்லாம்
அருவமாயத் தோள்கள்தாம்

மாசில்லா மனம்கொண்டு
மற்றவரைப் போற்றுகின்ற
பாசமுள்ள நெஞ்சமெல்லாம்
படர்ந்திருக்கும் சோகமதை
நேசமென்னும் நிம்மதியால்
நீக்கிவிடும் மருந்துபோல
வேசமிடும் தோள்களெல்லாம்
வெறும்மாயத் தோள்கள்தாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக