நாள்
4
(17.05.2020)
'போதிமரத்தின் தேடல்'
போதிமரத்
தேடலிலும்
புத்தனையே முன்னிருத்தி
நீதிநெறி
தேடுகின்ற
நேர்மையாளர் நினைவினிலும்
சாதிமதப்
பேதமின்றிச்
சமத்துவத்தில் பிடிப்புள்ள
நீதிமானின்
நெஞ்சினிலும்
நிலையில்லா போராட்டம்
வேசமட்டும்
உண்மையென்று
வெளிவேசம் போடாமல்
பாசத்திற்குப்
பணிவுகாட்டிப்
பண்போடு பழகிடவே
ஆசைக்கு
அடிமையின்றி
அன்புக்கு அடிமையாகும்
நேசமுள்ள
நெஞ்சினுக்கு
நித்தமொரு போராட்டம்
வறுமையிலே
வாழ்ந்தாலும்
வாய்ப்பின்றி உழன்றாலும்
வெறுமையான
வாக்கைமட்டும்
வேதமென்று நம்பாமல்
பொறுப்புள்ள
தலைமகனாய்ப்
புத்தியுள்ள செயல்களையே
பொறுமையுடன்
செய்வதோடு
புதுமைகளும் புகுத்திடுவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக