நாள்
28
(10.06.2020)
'நிறமற்ற உலகில் நான் ஓவியன்'
வீடொன்றில்
விளைகின்ற
விலையில்லா அன்பிற்குக்
கூடொன்றைக்
கூட்டுறவுக்
குடும்பத்தில் கண்டாலும்
ஈடொன்று
கொடுப்பதற்கு
இன்றிங்குக் காண்கின்ற
நாடொன்றே
நமக்கான
நல்லதொரு அடையாளம்
சாதிமதம்
பெயராலே
சங்கங்கள் ஏற்படவே
வீதிதோறும்
விதவிதமாய்ப்
வீண்சண்டை விரோதங்கள்
தேதிவாரி
யுண்டாகிப்
தெருவெல்லாம் பரவியதால்
நாதியற்ற
அனாதைபோலப்
நல்லவர்கள் நிற்கின்றார்
அறம்போற்றும்
அறவாளர்
ஆற்றாத அறக்கருத்தைப்
புறம்பேசும்
பொறையாளர்
போதனையாய்ப் புகட்டுவதால்
வரம்பெற்றோர்
வாழ்வினிலே
வளம்குறையக் காண்பதுபோல்
தரமானோர்
வாழ்வினிலும்
தடுமாற்றம் காண்கின்றார்
நிறமற்ற
வுலகத்தில்
நானுமோரோ வியனாக
இருந்தாலு
மிங்கிருக்கும்
இடைத்தரகர் கூட்டத்தில்
கருத்தாக
வுரைக்கின்ற
கணக்கற்ற வார்த்தைகளைப்
பொருந்தாத
வண்ணத்தில்
புதுப்படமாய் வரைகின்றேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக