நாள்
20
(02.06.2020)
'உன்னை விலகுவதில்லை'
ஈரெட்டு
வயதினிலே
எனையீர்த்த இனியவளே
பேரென்ன
சொல்லிவிடு
பிதற்றாமல் நானிருக்க
ஊரெல்லாம்
உனைப்பார்த்து
ஓவியமாய் வர்ணிக்க
சாறில்லாக்
கரும்பைப்போல்
சவலுரேண்டி நாளெல்லாம்
பருவத்தைப்
பறைசாற்றும்
பட்டுடலின் பேரழகே
மருண்டவிழிப்
பார்வையிலே
மானினமும் மருளுதடி
கருங்கூந்தல்
அலைதலிலே
கார்மேகம் தோற்குதடி
கருஞ்சிவப்பு
மென்னிதழோ
காளையரை இழுக்குதடி
கண்ணிரண்டும்
காந்தமென
காளையரின் உள்ளமதை
கண்டபோதே
இழுக்குதடி
கல்மனதைப் பதைக்குதடி
உன்னிருக்கும்
ஒளிவெள்ளம்
உள்மனத்தில் ஊடுருவ
என்னிருக்கும்
இதயமெங்கும்
இருளகன்று போனதடி
வரும்பாதை
பார்த்திருந்து
வாயாறப் பேசிடவே
தெருவோரம்
நானிருந்து
தினந்தோறும் பார்த்தாலும்
வெறுப்பில்லாப்
பாசமதை
விருப்பமோடு தந்தவளை
மறப்பதற்கு
முயன்றாலும்
மனத்தாலே முடியவில்லை
நெடுநேரம்
காத்திருந்து
நெஞ்சினியால் கரம்பற்றித்
தொடும்போது
தோள்சுருக்கி
தொரட்டிவிழி காட்டினாலும்
கடுஞ்சொல்லு
சொல்லாமல்
கனிவுடனே பார்ப்பவளே
இடுகாடு
போனாலும்
இனியவளை நான்மறவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக