அன்புள்ள
அம்மாவிற்கு
(எண்சீர்
விருத்தம்)
விண்வெளியின்
வீதி யெங்கும் விரவினாலும்
விடிவெள்ளிக்
கூட்டந் தன்னில் ஒளிர்கின்ற
வெண்மதியின்
குளுமை தன்னைப் பெற்றிலங்கும்
விந்தையினை
வேறு வேறாய்க் காட்டாது
பெண்ணினத்தின்
பெருமை சொல்லும் பெட்டகமே!
பேரறிவே!
அன்பிற் கினிய எனதம்மா!
வண்ணமய வாழ்க்கை
பெற்று வாழ்ந்தாலும்
வயிற்றிலொரு
பிள்ளை வளர வேண்டுமென்று
எண்ணத்தில்
ஏற்றம் கொண்ட எனதம்மா!
எங்கெங்கோ
தேடிக் கண்டத் திரவியமாய்
அண்டத்தில்
பிண்டம் வைத்துச் சுமந்தாலும்
ஐயிரண்டு
திங்கள் அயர்ந்தும் அயராமல்
கண்ணிரண்டும்
காட்டு கின்ற கவலைதனை
களிப்பாக
மாற்றி நிற்கும் விந்தையோடு
எண்ணில்லா
ஏக்கம் தன்னில் இரஞ்சினாலும்
எல்லையில்லா
மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றார்.
திரு கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக