புதன், 28 செப்டம்பர், 2016


நாடகம் இயற்றுவதற்கான கருப்பொருள்

1. சிங்கப்பூரில் வயதானவர்கள், ஆதரவற்றோர் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையிலும் அவர்களுடைய மன தைரியத்திற்கும் ஏற்ற தொண்டூழியம் பற்றிய கருப்பொருள்.

2. பள்ளி மாணவர்களில் சிலர் குடும்பச் சூழ்நிலை காரணமாக மன இறுக்கத்தில் இருப்பர். அவர்களுடைய மன இறுக்கத்தைக் களையும் பொருட்டு மனநலம் மற்றும் தன்னம்பிக்கை பற்றிய கருப்பொருள்.

3. சிங்கப்பூர் மக்களில் சிலர் அரசின் சட்டதிட்டங்களை மதிக்காமல் நடக்கின்றனர். அவர்களை இச்சட்டதிட்டங்களை மதிக்கும்படியாக செய்வதற்கான கருப்பொருள்.

4. சிங்கப்பூர் மக்கள் விரைவு உணவு சாப்பிடுவதையே விரும்புகின்றனர். ஆனால் இவ்வுணவு உடல் நலத்தைப் பாதிக்கும் என்பதை உணராமல் இருக்கின்றனர். இதனை விளக்கும் பொருட்டும் இயற்கை உணவுகளின் நன்மை குறித்து விளக்குவதற்குமான கருப்பொருள்.

5. சிங்கப்பூரில் சில கணவன் மனைவியரிடையே புரிந்துணர்வு என்பது குறைவு இதனால் விவகாரத்து அதிகரிப்பு உள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டான கருப்பொருள்.

6. சிங்கப்பூரில் சில பதின்ம வயதுடையோர் படிப்பில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாகக் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை அச்செயல்களில் ஈடுபடாமல் தவிர்ப்பதற்கான கருப்பொருள்.
7. சிங்கப்பூரில் மக்கள்தொகை என்பது முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. ஆனால், இதில் மக்கள் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. எனவே, அதனை வலியுறுத்தும் படியான கருப்பொருள்.

8. சிங்கப்பூரில் தேசியச் சேவை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள முக்கியக் கடமையாகும். எனவே, இச்சேவையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியும். அதனை வலியுறுத்தியும் கூறுவதானக் கருப்பொருள்.

9. சிங்கப்பூரில் வாழும் மக்கள் பல்வேறு இனத்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் வேறுபட்டதாக இருந்தாலும் சிங்கப்பூரியன் என்ற ஒற்றுமைத் தேவை. எனவே இனமத நல்லிணக்கம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையிலான கருப்பொருள்.


10. சிங்கப்பூர் மக்களின் வாழ்வாதரம் என்பது இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பொருத்துள்ளது. எனவே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கருப்பொருள்.

பாடம்           QCJ 525 தமிழ் இலக்கியம் கற்பித்தல் (நாடகம்)
நாள்            18 – 10 – 2012
பொன். கணேசுகுமார்.
உயர்நிலை மாணவ ஆசிரியர்
தேசியக் கல்விக் கழகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக