புதன், 28 செப்டம்பர், 2016


பேருந்து ஓட்டுனர் கொலை (தமிழ் முரசு நாளிதழ் செய்தி)
நாள் 8 – 10 – 2012,       நேரம் 12.30 – 02.30

முன்னால் சென்ற பேருந்துடன் லோரி மோதல். அதனைத் தட்டிக் கேட்ட பேருந்து ஓட்டுனருடன் லோரி ஓட்டுனர் மோதல். அப்போது பேருந்து ஓட்டுனர் கொலை.
முதலில் இரண்டு வாகன ஓட்டுனர்களுக்கும் வாய்த் தகராறு உண்டானது. அத்தகராற்றில் முடிவு ஏற்படாததால் லோரி ஓட்டுனர் வண்டியை ஓட்டிச் சென்றான். உடனே பேருந்து ஓட்டுனரும் பேருந்தை ஓட்டிச் சென்று லோரி முன் நிறுத்தினான். இதனால் கோபமடைந்தான். லோரியில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து பேருந்து ஓட்டுனர் தலையில் அடித்தான். உடனே பேருந்து ஓட்டுனர் கீழேச் சுருண்டு விழுந்து இறந்து போனான்.

இச்சம்பவத்தால் நாம் அறிவது

லோரி ஓட்டுனர் என்ன செய்திருக்கலாம்?

1.   லோரி ஓட்டுனருக்கு மூர்க்கத்தனம் இருந்தது.
2.   நாம் செய்யும் காரியத்தால் என்ன நடக்கப்போகிறது என்று அவன் சிந்திக்கவில்லை.
3.   லோரி ஓட்டுனர் பேருந்து ஓட்டுனரிடம் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்திருக்கலாம் அல்லது மன்னிப்புக் கோரியிருக்கலாம்.
4.   அவன் பேருந்து ஓட்டுனர்க்கு தக்கப் பதிலையோ அல்லது சேதமடைந்ததற்கு உண்டான இழப்புத் தொகையைக் கொடுத்திருக்கலாம்.
5.   காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கலாம்.

பேருந்து ஓட்டுனர் என்ன செய்திருக்கலாம்?

1.   லோரி ஓட்டுனர் படிப்பறிவில்லாதவன் என்று தெரிந்தாலோ அல்லது மூர்க்கமானவன் என்று தெரிந்தாலோ பிரச்சனையிலிருந்து விலகியிருக்கலாம்.
2.   பேருந்தில் ஏற்பட்ட சேதத்திற்கு தக்க இழப்புத் தொகையைக் கோரியிருக்கலாம்.
3.   லோரியின் எண்ணைக் குறித்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கலாம்.
4.   சரியான பதில் சொல்லாமல் சென்றவனைத் துரத்திச் சென்று சண்டையிடாமல் இருந்திருக்கலாம்.
5.   பேருந்து கோட்டத்தில் சென்று நடந்ததைக் கூறியிருக்கலாம்.

பெயர் கணேசுகுமார் பொன்னழகு
மாணவ ஆசிரியர் (பட்ட மேற்படிப்புப் பட்டயக்கல்வி)
தேசியக் கல்விக் கழகம்
சிங்கப்பூர்.

பாடம்    :  QCT520 தமிழ்மொழி கற்பித்தல் 1
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக