புதன், 28 செப்டம்பர், 2016


                               சிந்தனைத் துளிகள்

                          வலிமை தரும் எண்ணங்கள்

      வணக்கம் மாணவர்களே! இன்று நாம் நமக்கு உள்ள நேரம் போதாமைப் பற்றிப் பேசினோம். அதற்குத் தீர்வு காணும் பொருட்டு நம் பேராசிரியரிடம் பேசினோம். அதற்கு அவர் நமக்கு ஆறுதலான பல செய்திகளைக் கூறி மனத்திற்கு வலிமை சேர்த்தார். நாமும் மனதளவில் வலிமை பெற்றோம். இதே கருத்தைத்தான் டாக்டர் உதயமூர்த்தி அவர்களும் பின்வருமாறு கூறுகிறார்.
அதாவது, நம்மைச் சுற்றி இருப்பவர்கள்தாம் நம்முடைய எண்ணங்களுக்கு வலிமையை வழங்கவேண்டும். நமக்கு நம்பிக்கையைத் தரமுடியும். நம்பிக்கையுடன் கூறப்படும் ஓர் எண்ணம் தீர்க்க தரிசனம் நிறைந்த ஒரு செயலாகும். அது உண்மையாகத்தான் போய்முடியும். அப்படித்தான் பல மனிதர்களின் வெற்றிக்கு அவர்களுடைய மனைவிமார் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

      ஆகையால், நண்பர்களே! உறவினர்களே! மனைவிமார்களே! நீங்கள் உங்கள் அருகில் உள்ளவர்களிடம் அவர்களுக்கு வலிமை தரும் எண்ணங்களைச் சொற்களைப் பரவ விடுங்கள். ஏனெனில், மற்றொருவர் உங்களை வெற்றிகரமாகப் பார்க்கும்போது நீங்களும் நானும் ஒரு நாளும் தோல்வி அடைய முடியாது என்று கூறுகிறார்.

கணேசுகுமார் பொன்னழகு
மாணவ ஆசிரியர்
தேசியக் கல்விக் கழகம்
சிங்கப்பூர்.
QCT 521 தமிழ்மொழி கற்பித்தல் 2
நாள்     24 – 01 – 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக