ஞாயிறு, 21 ஜூன், 2020





நாள் 15 (28.05.2020)

'குழந்தைகள் இன்னமும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்?'

பற்றோடும் பரிவோடும்
பெற்றெடுத்த குழைந்தைக்கு
உற்றோரும் பெற்றோரும்
உறுதுணையா யிருந்தாலும்
சுற்றோரும் மற்றோரும்
சோதனைகள் தந்தாலும்
குற்றமில்லா நெஞ்சோடு
குரோதமின்றிச் சிரிக்குதுபார்

வெள்ளாட்டுப் பாலைப்போல்
வெண்மையான வண்ணத்தைக்
கள்ளமில்லா உள்ளத்தில்
கருணையாகக்  கொண்டதனால்
வெல்லத்தின் சுவையாக
வாயிதழை விரித்திங்கு
வெள்ளைமனக் குழந்தைகளும்
வெறுப்பின்றிச் சிரிக்குதுபார்

கள்ளங்கள் கபடங்கள்
காட்டாற்று வெள்ளம்போல்
எல்லைதாண்டிப் போனாலும்
ஏதுமின்றி ஒழிந்தாலும்
எல்லோரும் கூடிநின்று
இடிபோல மிரண்டாலும்
குழந்தைகளோ இன்னமுந்தான்
குறுஞ்சிரிப்பாய்ச் சிரிக்கின்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக