“தீபாங்கள் பேசும்” – அக்டோபர் 2025 - 305
(எண்சீர்
விருத்தம்) முதல் பரிசு
துலையென்னும்
தூயதமிழ் மாதம் தன்னில்
தேய்பிறையும்
தேய்ந்துவந்த அருவ மின்றித்
தொலைந்திருக்கும்
இரவுநேரத் துருவநாளில்
தொன்றுதொட்டுத்
தொடர்கின்ற பழக்க மாகத்
தலையினிலும்
மேனியிலு மெண்ணெ யிட்டுத்
தண்நீரில்
தலைமுழுகிக் குளித்த பின்னே
நிலைமாட
விளக்கேற்றி வணங்கி நிற்க
நிறைவரிசைத்
தீபங்கள் நிறைவாய்ப் பேசும்
காத்தருளும்
கடவுளாகக் கண்முன் தோன்றிக்
கைபிடித்து
வழிநடத்தும் முன்னோர் தம்மை
மூத்தோரும்
இளையோரும் ஒன்று கூடி
முறையாகப்
பக்தியோடு போற்று கின்ற
சாத்திரத்தின்
வழியினிலே சந்தம் கூட்டிச்
சங்கல்பம்
கழிக்கின்ற நன்னாள் தன்னில்
பூத்துள்ள
பூவாலே பூசை செய்யப்
புத்தொளியில்
தீபங்கள் புதிதாய்ப் பேசும்
கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக