அமரர்
சுப அருணாசலம் நினைவு
சூழலுக்குப்
பாடல் எழுதும் போட்டி
‘மணிவிழா காணும் சிங்கப்பூர்’
பல்லவி
காத்திருந்த காலமது கண்முன்னே தெரியுதடி
நேத்துவரை நாம்நினைத்த நிம்மதிதான் நிலவுதடி
பாத்துப்பாத்துப் பாடுபட்ட பாட்டன்பாட்டி உழைப்பெல்லாம்
பலன்கொடுக்கும் கனிமரமாய்ப் பக்கத்திலே நிற்குதடி
(காத்திருந்த காலமது…)
சரணம் 1
மக்களுக்கான மாற்றங்களை
மறுப்பின்றிச் செய்திடவே
மண்தோன்றி விண்தொடும் மாளிகையும் அமைத்ததடி
கல்வியும் மருத்துவமும் கட்டான பாதுகாப்பும்
கடல்தாண்டும் போக்குவரத்தும் கவலையகலச் செய்ததடி
(காத்திருந்த காலமது…)
சரணம் 2
நுண்ணறிவு நுணுக்கங்களை நுட்பமுடன் உட்புகுத்தி
நூதன மாற்றத்திற்கு நுழைபுலனாய் விளங்குதடி
தொழில்நுட்ப வசதியோடு தொலைத்தொடர்பு வசதியையும்
தொய்வின்றிக் கொடுத்திங்கு தொடர்வெற்றி கண்டதடி
(காத்திருந்த காலமது…)
சரணம் 3
அறுபத்தைந்தில் கண்டகனவை இருபத்தைந்தில் நிறைவேற்றி
அறுபதாண்டு கொண்டாட்டத்தை ஆர்ப்பரிக்கச் செய்தாலும்
அடுத்துவரும் காலத்திலும் அனைவரும் பயன்பெறவே
அறிவான திட்டங்களை அழகழகாய்த் தீட்டுதடி
(காத்திருந்த காலமது…)
கணேசுகுமார்
பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக