“எரியும் இரவுகள்” – செப்டம்பர் 2025 - 304
(அறுசீர்
விருத்தம்) மூன்றாம் பரிசு
எரியும்
இரவுச் சூரியனாய்
எங்கும் ஒளிரும் மின்விளக்கில்
விரையும்
பொழுது விடிந்தாலும்
விடிந்த பொழுது கரைந்தாலும்
குறைந்த
வெளிச்ச வானத்தில்
கடிதாய் முளைக்கும் விண்மீன்போல்
உறைந்து
கிடக்கும் உள்ளத்தில்
ஊமை சொற்கள் பலவாகும்
எல்லை யில்லா
இன்பத்தை
என்றும் உன்னுள் கொண்டவளே!
தொல்லை கொண்ட துன்பத்தைத்
தொலைவில் விட்டு வளர்ந்தவளே!
வள்ளம் போலச்
சுழன்றாடும்
வாழ்வில் சிக்கித் தவித்தாலும்
வெல்ல மன்ன
சுவையாக
வெளியே நீயும் சிரிக்கின்றாய்!
கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக