“காற்றுக் கென்ன வேலி” – மே 2025 - 300
(அறுசீர் விருத்தம்) மூன்றாம்
பரிசு
சேற்றில் நின்று உழைப்பவர்கள்
செய்யும்
தொழிலே உயர்வென்று
ஏற்றத் தாலே நீர்பாய்ச்சி
எருது
கொண்டு ஏருழுது
நாற்றுப் பிடிங்கி நடவுசெய்து
நான்கு
மாதம் காத்திருந்து
மாற்று போன்ற நெல்மணியை
மகிழ்ச்சி
யோடு பெற்றவரும்
ஏற்றத் தாழ்வு பார்க்காது
எதிலும்
விரிசல் கொள்ளாது
வேற்றுக் கிரகம் சென்றவரும்
விதியை
வென்று நின்றவரும்
நேற்று மின்றும் நெஞ்சொடு
நிலைத்து
விட்ட பண்பாட்டுக்
காற்றுக் கில்லை வேலியென்று
கடிதே
யுரைப்பர் எந்நாளும்
கணேசுகுமார்
பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக