கவிராசன்
இலக்கியக் கழகம் & நம் உரத்த சிந்தனை நடத்தும்
விருத்தப்பா
போட்டி 2025
அன்பொன்றே!
வழியென்று காட்டு!
பெண்ணென்றும் ஆணென்றும் பேதமைக
ளின்றிப்
பெற்றெடுத்தத்
தாயுள்ளம் பேருவகை கொள்ளும்
எண்ணத்தி லுதித்திட்ட ஏடில்லாப்
பாட்டில்
இன்தமிழின்
இலக்கணங்கள் இசையோடு துள்ளும்
கண்ணென்றும் மணியென்றும் களிப்புடனே
கொஞ்சி
காட்டுகின்ற
பாசமதை கவிமொழிகள் சொல்லும்
பண்பாட்டி லக்கியங்கள் பகர்கின்ற
கூற்றில்
பண்பட்ட
அன்பொன்றே வழியென்று காட்டும்
கணேசுகுமார்
பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக