வியாழன், 8 மே, 2025

 

காதலிக்க நேரமில்லைபிப்ரவரி 2025

            (அறுசீர் விருத்தம்)

அடுக்கு மாடி கட்டடமோ

அக்கம் பக்கம் குடியிருப்போ

குடும்பம் குழந்தை உறவென்று

கூடி யிங்கு வாழ்ந்தாலும்

நெடுநாள் பழக்கம் கொண்டோராய்

நெஞ்சின் நினைவில் நிலைத்தோராய்

அடுத்த வீட்டு மனிதரோடு

அளாவிப் பேச நேரமில்லை

 

கொண்டோர் கொடுத்தோர் வந்தாலும்

குந்திப் பேசும் நேரமின்றி

வண்டாய்ப் பறந்து வளம்சேர்க்க

வாய்ப்புத் தேடி யலைவோரும்

உண்டு முறங்கும் நேரத்தில்

ஓய்வு கொள்ள முனைவோரும்

கண்டும் களித்து முறவாடி

காதல் செய்ய நேரமில்லை

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக