வியாழன், 8 மே, 2025

 

பனிப் படரும் நினைவு – டிசம்பர் 2024

 

தொன்மையெனத் தொல்லியளார் கூறு கின்ற

தமிழர்தம் மரபோடு நற்பண் பாடும்

தொன்றுதொட்டுத் துலங்கினாலும் தூய்மை யோடு

தொடருகின்ற நினைவுகளும் பனியாய் மாறி

இன்றுபோல இணக்கமுடன் மகிழ்ந்து வாழும்

எண்ணத்தை வளர்க்கின்ற இதயம் தன்னில்

முன்னோரின் முதுசொல்லும் முதன்மை பெற்று

முன்னேற்றப் பாதையிலே கொண்டு செல்லும்

 

உள்ளமதில் உருக்கொண்ட ஆசை யெல்லாம்

ஊணுடம்பாய் உருவெடுத்து உளலும் போது

வெள்ளமென வீறுகொண்டு விரைவு கின்ற

வீணான வார்த்தைகளை விட்டொ ழித்து

கள்ளமில்லா வெள்ளைமனம் கொண்டோர் முன்னே

கயமையின்றி வாழ்வதற்குக் எண்ணம் கொண்டு

பிள்ளைமொழி மழலையாலே நீயும் செப்ப

பனிப்படரும் நினைவுகளாய்க் கண்முன் தோன்றும்

 

திரு கணேசுகுமார் பொன்னழகு 

சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக