வியாழன், 8 மே, 2025

 

அமரர் சுப அருணாசலம் நினைவு சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி!

சிங்கப்பூரு சீமைக்குத்தான் போய் வருவோமா? - இரண்டாம் பரிசு பெற்றது. 

சிங்கப்பூரு சீமைக்குத்தான் போய் வருவோமா?  - கண்ணே

சிறப்பு வாய்ந்த இடங்களுக்கும் போய் வருவோமா?

சிங்கப்பூர் ஆற்றோரம் சுற்றி வருவோமா? – கண்ணே

சின்னச் சின்ன நிகழ்வுகளையும் நினைவுறுவோமா?

(சிங்கப்பூரு சீமைக்குத்தான் ...?)

இங்குமங்கும் கட்டடங்கள் நிறைய இருக்குது  - அவை

ஏற்றம் கொண்ட எழிலாலே பரந்திருக்குது

சிங்கமுக மெர்லயனும் எழுந்து நிக்குது – அதன்

சீற்றத்திலே நீரூற்றும் சீறிப் பாயுது

(சிங்கப்பூரு சீமைக்குத்தான் ...?)

தெப்பமன்ன படகுகளும் ஒடுதுபாரு  - அங்குக்

கரையோரம் இராட்டினமும் சுற்றுதுபாரு

கப்பலன்ன கட்டடமும் கண்ணைக் கவருது  - அது

உயரமான கட்டடங்களின் மேலே இருக்குது

(சிங்கப்பூரு சீமைக்குத்தான் ...?)

பொழுதுபோக்கும் வசதிகளும் நிறைந்திருக்கிது – அதுக்கு

புலானுபியும் செந்தோசாவும் சான்றாய்த் திகழுது.

விலங்குத்தோட்டம் பறவைப்பூங்க பரந்திருக்குது  - இங்குப்

பல்லினப் பறவைகளும் விலங்குகளும் குழுமியிருக்குது

(சிங்கப்பூரு சீமைக்குத்தான் ...?)

புரண்டுவரும் கடலலையோ கரையை முட்டுது – அதில்

பொங்கும் நுரை புதுவிதமாய்ப் புன்னகைக்கிது

திரண்டிருற்கும் கூட்டமெல்லாம் கடலை நோக்குது – அலைகள்

துள்ளியெழுந்து ஆடும்காட்சி கண்ணில் தெரியுது

(சிங்கப்பூரு சீமைக்குத்தான் ...?)

சிங்கைக் கடலோரம் காலாற நடந்திடுவோமா? – நம்ம

கால்களையும் நனையவிட்டுக் களிப்புறுவோமா?

சீனமலாய் தமிழர்தம் உணவுகளை ருசித்திடுவோமா? – அங்குச்

திரையரங்கம் சென்றுதானே படம் பார்ப்போமா?

(சிங்கப்பூரு சீமைக்குத்தான் ...?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக