வியாழன், 8 மே, 2025

 

பௌர்ணமி புன்னகை – அக்டோபர் 2024

 

முப்போகம் விளைந்தநிலம் காய்ந்து

முறைமாறிக் கிடக்குதிங்கு வானம்

தப்பாமல் மழைபெய்தால் தண்ணீர்

தரிசுநிலம் பாய்தோடிச் செழிக்கும்

குப்பம்மாள் நட்டபயிர் விளைந்தும்

குதிர்பானை நிறையாம லிருக்கும்   

பப்பாதி விளைந்தாலும் மகசூழ்

பௌர்ணமியின் புன்னகையாய் மிளிரும்

 

வெப்புவுலை வெகுவாகக் தோன்றியதால் வெளியெங்கும்

அனலாய்க் மாற

தப்பாமல் மழைபொலிந்த காலமெல்லாம் தடமாறித்

தவறி ழைத்துப்

ஒப்பில்லா உழவுக்கும் உழைப்பிற்கும் ஊதியமாய்

                        கொடுத்து வந்த

முப்போகம் விளைந்தநிலம் முட்புதராய் முகம்மாறி

கிடக்கு திங்கு

 

வெப்புவுலை வெகுவாகக் தோன்றி யிங்கு  

வெந்தனலை வெளியெங்கும் உமிழ்ந்த தாலே

தப்பாமல் மழைபொலிந்த கால மெல்லாம்

தடமாறித் தவறிழைத்துப் போன தின்று

முப்போகம் விளைந்தநிலம் மலட்டு மண்ணாய்

முகம்மாறி மூச்சற்று கிடக்கு திங்கு

எப்போது மாறுமிந்த நிலைமை யென்று

ஏங்குகின்ற எளியோரும் இங்கே யுண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக