“பெண்ணின் பெரும்பேறு!”
– மார்ச் 2025
(எண்சீர் விருத்தம்)
மண்பரப்பில் தோன்றுகின்ற உயிர்க ளோடு
மகிழ்வோடும் நிறைவோடும் வாழ வேண்டி
அன்றுமுதல் இன்றுவரை தொன்று தொட்டே
அன்னைவழிச் சமூகமென ஏற்றுக் கொண்டு
பெண்ணென்ற பெரும்பேற்றின் மாண்பு
தன்னைப்
பெருமையாக எண்ணியெண்ணிப் போற்று கின்ற
பண்பாட்டைக் கொண்டிலங்கும் தமிழ ரெல்லாம்
பண்போடும் பணிவோடும் வாழ்த்தி னாலும்
மண்பரப்பில் வாழ்கின்ற மனித ரோடு
மாட்சிமைகள் புரிகின்ற மங்கை யர்கள்
விண்பரப்பின் வீதியிலும் விரைவ தாலே
வியப்பூட்டும் வெற்றிகளைத் தனதாய்க் கொண்டார்
பிண்டத்தைச் சுமக்கின்ற பேற்றைப்
பெற்றும்
பெண்ணினத்தின் உயர்வுதனை உந்திக் காட்டி
அண்டத்தை அடைவதோடு ஆளு தற்கும்
அறைகூவல் விடுக்கின்றார் அன்பு கொண்டே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக