புதன், 7 அக்டோபர், 2026

 

“மார்கழிப் பூவே!” – டிசம்பர் 2025 - 307

(எண்சீர் விருத்தம்) முதல் பரிசு

 

மண்வளத்தின் மாண்புதனை மகசூழாய் மாற்றி

மாந்தர்க்கு அளித்திடவே மார்கழியாய் வந்தாய்!

கண்களுக்குக் கவினூட்டும் காட்சிகளைக் கொண்டு

கார்காலப் பனிக்குளிரின் களமாக நின்றாய்!

விண்மீன்கள் விலகாத விடிகாலை நேரம்

வீட்டின்முன் கோலமெனப் பலவண்ணம் கொண்டாய்

பெண்ணவளை நல்லதொரு வரம்வேண்டி நாளும்

பெருமையோடும் பொறுமையோடும் நோன்பிருக்க வைத்தாய்

 

விடிகாலைக் கருக்களிலே விண்ணவரும் கேட்க

வஞ்சியவர் வாய்திறந்து பாடிடவே வைத்தாய்

கொடியிடையோர் குளக்கரையில் கூட்டமாகக் கூடி

குளிர்நீரில் குதூகலமாய் நீராட செய்தாய்

அடியடியாய் அன்னமென அழகுடனே ஊர்ந்து

அண்டைவீட்டுப் பெண்களையும் அரவணைக்கச் செய்தாய்

துடிப்போடு துள்ளலையும் துணையாகக் கொண்டே

தைமகளின் முன்பிறந்து தமக்கையாக நின்றாய்

 

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக