புதன், 7 அக்டோபர், 2026

 

திருமண வாழ்த்து!

மணமகன் & மணமகள்

குறிஞ்சிகுமார் எம் பி பி எஸ்                 ஷப்னா எம் பி பி எஸ்

தேதி  27.11.2025                    நாள்  வியாழக்கிழமை

இடம் வெள்ளளூர் விலக்கு

 

            திருவாச கமணிமொழி பெற்றெடுத்த சீராளன்

தினந்தோறும் சீராட்டிப் பாராட்டி வளர்த்தமகன்

குறிஞ்சியென்னும் பெயர்கொண்டு குதூகலமாய் வளர்ந்தமகன்

குற்றமில்லா நடத்தையிலே குலம்காத்து நின்றமகன்

கருவிழியாள் காதலிலே கட்டுண்டு களைப்பாறி

காலமெல்லாம் களிப்போடும் செழிப்போடும் வாழ்ந்திடவே

திருவரங்கச் சபைமுன்னே பெரியோர்கள் ஒன்றுகூட

திருக்கோலம் பூண்டிட்டு மணமகனாய்க் காத்திருக்க

 

குளிர்மாதம் கார்த்திகையின் பதினொன்றாம் தேதியன்று

குறிஞ்சியவன் கரம்பற்ற  கோதையவள் வருகின்றாள்

ஒளிர்கின்ற வெளிச்சத்தின் உள்ளீடாய் விளங்கிடவும்

ஒன்றுபட்ட உள்ளன்பில் உயிர்க்கொண்டு வாழ்ந்திடவும்

விளிப்பான மனத்தோடும் வீரியத்தின் துடிப்போடும்

வாழ்வென்னும் படகோட்ட வெற்றிமகள் வருகின்றாள்

களிப்போடும் கனவோடும் காலமெல்லாம் நலம்வாழ

குறிஞ்சியுடன் கரம்கோர்க்க குலமகளாய் வருகின்றாள்

 

ஊர்கூடி ஒற்றுமையாய் உள்ளரங்கில் நிறைந்திருக்க

உற்றாரும் உறவினரும் உறவாடி மகிழ்ந்திருக்க

ஆர்ப்பரிக்கும் அரங்கத்தில் அழகுடனும் மிடுக்குடனும்

ஆன்றோரும் சான்றோரும் அவையோராய் வீற்றிருக்க

தேர்ப்போல சமைத்திட்ட மணமேடை இருக்கைதன்னில்

திருவுருவாய்க் குறிஞ்சியோடு ஷப்னாவும் அமர்ந்திருக்க

பார்புகழும் குறளாலே பண்பாளர் முழங்கிடவே

பாங்குடனே மணமகனும் மங்கலநாண் பூட்டுகின்றான்

 

மருத்துவத்தைப் பணியாகக் கொண்டிலங்கும் மணமக்கள்

மாசின்றி மருவின்றி மனமொத்த அன்றிலைப்போல்

கருத்தினிலும் கடமையிலும் கண்ணியத்தைக் கைக்கோண்டு

கனிவோடும் பனிவோடும் காலமெல்லாம் களிப்போடும்

பெருமைபெற்ற காதலராய்ப் பேறுபெற வேண்டுமெனப்

பண்பட்ட பைந்தமிழில் பாசமுடன் பாட்டெழுதி

நெருங்கிவந்த உறவோடு நீடூழி வாழ்கவென்று

நிறைவான மனத்தோடு மகிழ்ந்தின்று வாழ்த்துகின்றோம்

 

பொன்னழகு கமலம் குடும்பத்தினர்

மற்றும்

நண்பர்கள்

வெள்ளிக்குறிச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக