புதன், 7 அக்டோபர், 2026

 

“அவள் ஒரு நதி” – மார்ச் 2026 - 310

(எண்சீர் விருத்தம்) முதல் பரிசு

 

மாந்தரோடு மாற்றுயிரும் மகிழ்வுடனே வாழ

                        மலையின்கண் வீழருவி மண்மீது பாயும்

சாந்தோடு மூலிகைவேர் சருகுகளும் சேர்ந்து

                        சந்தனங்கள் கமழ்கின்ற நதியாக மாறும்

காந்தலல்லி மலரோடு கட்டைகளும் சேர்ந்து

                        காட்டாற்று வெள்ளமென கரைபுரள ஓடும்

பாந்தமான பரிவோடும் பாரெங்கும் சென்று

                        பசிப்போக்கும் உழவருக்குப் பயனுறவே செய்யும்

 

பெண்ணவளும் பெற்றோர்தம் குலப்பெருமை தாங்கிப்

                        பிறந்தார்முன் பெருமிதமாய்ப் புகுந்தவீடு  செல்வாள்

பெண்டாளாய் வந்தமகள் பிள்ளைகளைப் பெற்றுப்

                        பெருமாட்டி யானாலும்  குலம்காத்து நிற்பாள்

பண்பாட்டுப் பழக்கமதைப் பழுதறவே கொண்டு

                        பணிவோடு பரிவினையும் பாங்குடனே யீவாள்

பெண்ணினத்துத் தாய்மையினைப் பிறர்மீதும் பெய்து

                        பேதமில்லாப் பெருவாழ்வில் நதியெனவே காப்பாள்

 

 

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக