"வகுப்பறைச்
சிறகுகள்" – செப்டம்பர் 2026 – 316
(அறுசீர்
விருத்தம்) – மூன்றாம் பரிசு
பாலர் பருவக்
கல்வியோடு
பட்டச் சான்று படிப்புகளும்
ஆலம் விழுதாய்ப்
படர்ந்திடவே!
அருகம் புல்லாய்த் தழைத்திடவே!
காலத் தோடு
கற்பித்துக்
கடமை யோடு செயலாற்றப்
பால மாக
இருந்திடுமே!
பள்ளிக் கூட வகுப்பறைகள்.
காலம் மாறிப்
போனாலும்
காட்சி மாறிப் போனாலும்
ஞால மெல்லாம்
கற்பிக்கும்
நடைதான் மாறிப் போனாலும்
நாளும் கற்கும்
வகுப்பறைகள்
நவீன மாகிப் போனாலும்
மீளும் நினைவுச்
சிறகுகளாய்
மீண்டும் மீண்டும் தொடர்ந்திடுமே!
கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக