புதன், 7 அக்டோபர், 2026

 

"அணிவகுக்கும் நினைவுகள்" – ஆகஸ்டு 2026 – 315

(எண்சீர் விருத்தம்) – இரண்டாம் பரிசு

 

அன்றுமுதல் இன்றுவரை வாழ்ந்துவந்த வாழ்வோ

                        அணிவகுக்கும் நினைவுகளாய் ஆழ்மனத்தில் தோன்றும்

குன்றுபோலச் செல்வங்கள் குவிந்திருந்த போதும்

                        குறையாத விருப்பங்கள் கோபுரமாய் நிற்கும்

இன்பமிகு இல்வாழ்க்கை எமைநாடும் போதும்

                        எல்லைகாணா ஆழியென இடர்வந்து போகும்

சென்றுலாவிச் சேகரித்த சிறப்புமிகு செய்தி

                        செதுக்கிவைத்தச் சிலையாக நெஞ்சமதில் வாழும்

 

ஆழ்மனத்துக் கடலினிலே பெருக்கெடுக்கும் அன்பு.   

                        அலைபோல ஆர்ப்பரித்தே அன்பரிடம் சேரும்

ஏழ்பிறப்பும் ஏங்குகின்ற இசைவில்லாக் காதல்

                        எண்ணத்தோ டிசைகின்ற இரக்கமாக மாறும்

ஊழ்வினையின் உந்துதலில் உறைந்திருக்கும் நட்பு

                        உண்மையென்னும் உறவினிலே ஒளிவின்றிப் பாயும்

வீழ்ந்தாலும் விவேகமுடன் போராடும் வீரம்

                        விரைவான வெற்றியினை விளைவித்தே தீரும்

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக