"மரகதக்கிள்ளை"
–
ஜூலை 2026 – 314
(அறுசீர்
விருத்தம்) – முதல் பரிசு
பஞ்சு போன்ற மேனியெங்கும்
பச்சை வண்ணம் கொண்டவளே!
விஞ்சு மழகுப் பெட்டகமாய்
வியப்பி லாழ்த்தி வந்தவளே!
கொஞ்சிப் பேசும் குரலாலே
குழந்தை யுள்ள மானவளே!
நெஞ்ச மெல்லா மினித்திடவே!
நேசம் கொண்டு வந்தாயோ!
பவழ வண்ண அலகாலே
பாலும் பழமும் புசித்தாலும்
நுவலும் திறத்தி னழகாலே
நொந்தோர் மறந்து மகிழ்வாரே!
புவனம் முழுதும் பறந்தாலும்
புங்க மரத்தில் அமர்ந்தாலும்
கவலை யில்லாக் கிள்ளையெனக்
காண்போ ருன்னைப் புகழ்வாரே!
கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக