“குழந்தைகளின் ஜன்னல்கள்”
– நவம்பர் 2025 - 306
(எண்சீர் விருத்தம்) மூன்றாம்
பரிசு
குழந்தைகளின் சாளரங்கள்
குழந்தைப்
பருவக் காலத்தில்
குறும்பு
செய்து கொஞ்சிடவும்
மழலை
மொழியின் பேச்சாலே
மகிழ்வு
கொண்டு குலாவிடவும்
பழக்க
வழக்கப் பண்பாட்டில்
புதுமை
கண்டு உணர்ந்திடவும்
நிழல்போல்
தொடரும் நினைவுகளால்
நிலைமை
யறிந்து நெகிழ்ந்திடவும்
தேரில்
ஏறி வருகின்ற
தெய்வந்
தன்னை வணங்கிடவே
ஊரில்
உள்ள மக்களெல்லாம்
ஒன்றாய்ச்
சேர்ந்து நிற்பதுபோல்
பாரில்
தோன்றும் புதுமைகளைப்
பாலர்
பார்த்து மகிழ்ந்திடவே
போர்வை
யில்லாச் சாளரமாய்
புவியில்
காட்சி கொடுக்கிறதே!
கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக