“மண்பானைக் கனவுகள்” – ஜனவரி 2026 - 308
(எண்சீர் விருத்தம்) இரண்டாம்
பரிசு
பண்பாட்டுப் பண்டிகையில் பொங்கலது சேரும்
பழந்தமிழர்
நன்றியினைப் பறைசாற்றிச் சொல்லும்
மண்குடிசை மாளிகையாய் மனதளவில்
தோன்றும்
மலரோடு
மாவிலையும் தோரணமாய்த் தொங்கும்
வண்ணமயக் கோலங்கள் வாசலிலே
மின்னும்
வாழையோடு
செங்கரும்பும் வாகாக நிற்கும்
திண்ணையோரச் சுவரெங்கும்
காவிவெள்ளை யாகும்
திருத்தமான
தாழ்வாரம் கூரைப்பூ தாங்கும்
நற்காலை வேளைதனில் நற்றமிழர்
கூடி
நானிலத்தின்
நலம்வேண்டி இயற்கைதனைப் போற்ற
முற்றமதில் கட்டிவைத்த
விறகடுப்பு கொண்டு
மூத்தோர்கள்
செப்பிவைத்த முதுமொழியில் நின்று
பெற்றோர்கள் அகம்மகிழ்ந்து
பெருமிதம்தாம் கொள்ள
பிள்ளைகளும்
ஏற்றிவைத்த பால்பானை பொங்கும்
சுற்றமுடன் உற்றவரும்
சூழ்ந்திருந்து வாழ்த்தும்
சுயமான
சுகந்தத்தை எங்கிருந்து காண்பேன்
கணேசுகுமார்
பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக