புதன், 7 அக்டோபர், 2026

 

"பேசாமல் போனவர்கள்" – ஜூன் 2026 – 313

(எண்சீர் விருத்தம்)

 

பெற்றாரும் பிறந்தாரும் உற்றகடன் போக்க

பிரிந்துவந்த பிரிவினிலே உறவுகளு முண்டு

பெற்றெடுத்த பிள்ளைகளின் பெருவாழ்வு வாழ

பெரும்பாடு படுகின்ற தந்தையரு முண்டு

வெற்றுடலும் வியர்வையிலே வெதும்பினாலும் வெந்த

வேதனையும் சோதனையும நெஞ்சமதி லுண்டு

பெற்றகடன் உற்றகடன் அத்தனையு மெண்ணிப்

பேசாமல் போனவர்கள் எத்தனையோ ருண்டு

 

வட்டிபோடும் கடனாலே வறுமைநாளும் வாட்ட

வாழ்க்கையினை வாழ்வதற்கு வாய்புகளைத் தேடும்

கட்டுமானம் முதற்கொண்டு கடற்பணிகள் செய்ய

காலைமுதல் மாலைவரை களைப்பாக மாறும்

சொட்டுகின்ற வியர்வையாலே தேகமெங்கும் வெந்து

சோர்வான நிலையாலே சுகமின்றிப் போகும்

எட்டவந்து பணிசெய்து எவ்வளவோ பெற்றும்

ஏதுமின்றி வாடுகின்ற ஏதிலிபோ லாகும்

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.

 

"பேசாமல் போனவர்கள்"

பெற்றாரும் பிறந்தாரும் உற்றகடன் போக்க

பிரிந்துவந்த பிரிவினிலே சோகமதைக் கொண்டு

பெற்றெடுத்த பிள்ளைகளின் பெருவாழ்வை யெண்ணி

பெரும்பாடு படுகின்ற தந்தையரு முண்டு

வெற்றுடலும் வியர்வையிலே வெதும்பினாலும் வெந்த

வேதனையும் சோதனையும நெஞ்சமதி லுண்டு

பெற்றகடன் உற்றகடன் அத்தனையு மெண்ணிப்

பேசாமல் போனவர்கள் எத்தனையோ ருண்டு

 

வட்டிபோடும் கடனாலே வறுமைநாளும் வாட்டும்

வாழ்க்கையினை வாழ்வதற்கும் வாய்புகளைத் தேடும்

கட்டுமானம் முதற்கொண்டு கடற்பணிகள் யாவும்

காலைமுதல் மாலைவரை களைப்பாக மாறும்

சொட்டுகின்ற வியர்வையாலே தேகமெங்கும் வேகும்

சோர்வான நிலையாலே சுகமின்றிப் போகும்

எட்டவந்து பணிசெய்து எவ்வளவு பெற்றும்

ஏதுமின்றி வாடுகின்ற ஏதிலிபோ லாகும்

 

வட்டி போடும் கடனாலே

வறுமை வந்து வாட்டினாலும்

பட்ட பாடு யாவையும்

பக்கம் பார்த்து வளர்ந்தபோதும்

சொட்டும் வியர்வை தேகமெங்கும்

சுரந்து  சோர்வைத் தந்திட்டாலும்

எட்டிப் போக எண்ணிடாத

எஃகு கோட்டை எங்களப்பா

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக