"கொடுத்துப் பார் அன்பை"
விண்ணதிர குண்டுகளை வீசு கின்ற
வீணர்க்காய் ஒன்றுரைப்பேன் நன்கு கேட்பீர்
மண்ணுயிரின் மகத்துவத்தை மதிக்க வேண்டி
மனம்நொந்து வேண்டுகின்றேன் கொஞ்சம் கேட்பீர்
அன்பென்னும் ஆழியிலே மூழ்கி நாளும்
அறிவார்ந்த நட்பென்னும் முத்தைத் தேடு
கண்ணீரும் கம்பலையும் இல்லா நாட்டைக்
காண்பதற்கும் கேட்பதற்கும் கனிவு காட்டு
முன்நின்று கைகொடுக்கும் தலைமை யாலே
முறையான ஆட்சியினை நடத்திக் காட்டு
உன்னுறவை நாடுகின்ற உயிர்க ளோடு
உளம்மகிழ உள்ளன்பைக் கொடுத்துப் பாரு
உன்னிடத்தில் உலகத்தார் ஒன்றி நிற்க
உண்மையான ஒட்டுறவில் வாழ்ந்து காட்டு
அன்றழர்ந்த மலரைப்போல் மலர்ச்சி யோடு
அவனியிலே அளவிடாத அன்பைக் கூட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக