திருமண
வாழ்த்து!
மணமகன் &
மணமகள்
ராம் பிரசன்னா & பவதாரிணி எம்
பி பி எஸ்
தேதி
22.02.2026 நாள் ஞாயிற்றுக்கிழமை
இடம் வேலம்மால் திருமண மஹால் – மதுரை
மாசிமாதம் எட்டாம்நாள்
காலைநேர முகூர்த்தத்தில்
மதுரைநகர்
மத்தியிலே அமைந்திருக்கும் மண்டபத்தில்
பாசமுள்ள
தில்லைநட ராசனும்சு பாஷினியும்
பண்பட்ட
தம்பதியாய்ச் சேர்ந்திருந்து வரவேற்க
நேசிக்கின்ற
நினைவோடும் நிலையான உறவோடும்
நெடுநாளாய்ப்
பழகிவரும் நட்பினரும் சூழ்ந்திருக்க
ஆசியோடு
அன்பினையும் அளவின்றி யளிக்கின்ற
அருள்நிறைந்த
ஆன்றோர்கள் மணவோலை படிக்கின்றார்
திருநாவுக்
கரசுஜெய லட்சுமியின் மகனுக்கும்
திருவாளர்
ராமகிருஷ் ணன்ராக்கு மகளுக்கும்
அருந்தவமாய்ப்
பிறந்தமகன் அன்பினிலே வளர்ந்தமகன்
அறிவினிலும்
ஆற்றலிலும் ஆல்போலத் தழைத்தமகன்
கரும்பினியச்
சொல்கொண்டு கலகலப்பாய்ப் பேசினாலும்
கண்ணியத்தைக்
கடமையெனக் கைக்கொண்டு காத்தமகன்
விரும்பியதை
வினையேற்று வென்றெடுக்கும் வேளையிலும்
விவேகமுடன்
செயலாற்றி வெற்றியினைக் குவித்தமகன்
அரண்மனைபோல்
மண்டபத்தில் மணமகனாய்க் கொழுவிருக்க
அளவில்லா
மிடுக்குடன்ராம் பிரசன்னா காத்திருந்தான்
குறைவில்லா
அழகுடனே மணமகள்ப வதாரிணி
குறுநகையாம்
புன்னகையில் தோழியுடன் வருகின்றாள்
அறம்போற்றும்
அவையோர்முன் கரம்குவித்து வணங்கியவள்
அன்பனவன்
அருகினிலே ஆசையோடு அமர்கின்றாள்
மரபறிந்த
சான்றோர்கள் மாங்கல்ய நாணெடுத்து
மணமகனின்
கைகளிலே மகிழ்வோடு கொடுத்திடவே
மரபிசையில்
வாத்தியங்கள் மங்கலமாய் ஒலித்திடவே
மணமகளின்
கழுத்தினிலே மங்கலநாண் பூட்டுகின்றான்
கருவிழியாள்
நெற்றியிலே கண்ணியமாய்த் திலகமிட்டு
காரிகையுன்
கணவனெனக் கண்ணசைவில் கதைக்கின்றான்
மருதாணி
கோலமிட்ட மைவிழியாள் கரம்பிடித்து
மணமகன்ராம்
சுற்றிவர மணமகள்ப வதாரிணியும்
பெரும்பேறு
பெற்றவளாய் எண்ணியெண்ணிப் பின்தொடர
பெற்றவர்கள்
பாதமதில் ஆசிவேண்டித் தொழுகின்றான்
மாசியிலே
இணைகின்ற மணமக்கள், மனமொத்த
அன்றிலைப்போல்
பன்னூறு மாமாங்கம் வாழ்கவென்று
மாசுமறு
வில்லாத பெரியோர்முன் மாண்போடும்
மற்றற்ற
மகிழ்வோடும் வாழ்த்துப்பா பாடுகின்றோம்
ஊசிவிழ
இடமின்றி ஊர்மக்கள் கூடிநின்று
உள்ளமெல்லாம்
அன்புகொண்டு உண்மையுடன் வாழ்கவென்று
வாசிப்பு
வாத்தியங்கள் வகைக்கொன்றாய் முழங்கிடவே
வள்ளுவனின்
சொல்கொண்டு வாழ்த்துப்பா பாடுகின்றோம்
பொன்னழகு
கமலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்
வெள்ளிக்குறிச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக